உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்.. வெளியான முக்கிய தகவல்..!!
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதம் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. எனவே புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 16 ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா கடிதம் ஒன்றை எழுதினார். அதில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்வது குறித்து பரிந்துரை செய்திருந்தார்.
IPL 2025: தொடர் தோல்வியால் தடுமாறும் சென்னை அணி.. பஞ்சாப்புடன் இன்று மோதல்..!!
இந்நிலையில் “உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்க நேற்று (29-04-2025) ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். அதன்படி பூஷண் ராமகிருஷ்ணா கவாய் வரும் மே மாதம் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். மேலும், கே.ஜி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு பட்டியலின சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கத்து”.


























