IPL 2025: தொடர் தோல்வியால் தடுமாறும் சென்னை அணி.. பஞ்சாப்புடன் இன்று மோதல்..!!
2025 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், ரசிகர்களின் அதீத ஆதரவை பெற்ற சென்னை அணியின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதாவது, விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் “இன்று (30-04-2025) சென்னை அணி பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்க்ஸை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.
மேலும், 5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக தோல்வியை மட்டும் கண்டு பிளே-ஆப் இழந்து விட்டது. இதை தொடர்ந்து, ஹோம் கிரவுண்ட் ஆன சேப்பாக்கத்தில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சென்னை அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 4 முறை தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்வி என 11 புள்ளிகளுடன் பொய்ண்ட்ஸ் டேபிளில் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் முல்லாப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுத்து இன்றைய இப்போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


























