ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2.2 லட்சம் வட்டி – இது நல்லா இருக்கே!

0

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2.2 லட்சம் வட்டி – இது நல்லா இருக்கே!

தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் பல இயங்கி வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் முதல் முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் வழங்கப்படும் திட்டங்களில் நல்ல லாபம் மற்றும் நல்ல வட்டி வழங்கப்பட்டு வருகிறது.இதில் தேசிய சேமிப்பு நேர வைப்புத் திட்டம் முக்கியமான ஒன்றாகும். ரூ.1000/- முதலீடு செய்வதன் மூலம் இத்திட்டத்தை தொடங்க முடியும்.

PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள் – உடனே இதை கவனிங்க!

நேர வைப்புத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. ஒற்றை மற்றும் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம். கூட்டு கணக்கில் மூன்று பெரியவர்கள் சேரலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மைனர் சார்பாக ஒரு கணக்கைத் திறக்கலாம். முதலீட்டாளர்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு முறையே 6.9 சதவீதம், 7.0 சதவீதம், 7.1 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். சமீபத்திய வட்டி விகிதங்கள் மார்ச் 31 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் சுமார் ரூ.2,24,974 வட்டி கிடைக்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!