
உங்களுக்கு “பொன்மகன் சேமிப்பு திட்டம்” பற்றி தெரியுமா…? மாதம் ரூ. 500 செலுத்தினால் ரூ. 1,90,000 வரை பெறலாம்..இதோ உங்களுக்காக
இந்திய அஞ்சல் துறையானது பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக பெண் குழந்தைகளை போன்றே ஆண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் “பொன்மகன் சேமிப்பு திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டம் ஆண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுகளுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் நீங்கள் மாதம் ரூ. 1,000 செலுத்தினால், 15 ஆண்டுகளில் முதிர்வு தொகையாக மொத்தம் 3,15,572 ரூபாய் கிடைக்கும். மேலும், இதற்கு வட்டி மட்டும் 1,35,578 ரூபாய் வரை கிடைக்கும்.
Today Gold Rate: இன்று நகை வாங்குவோருக்கு ஒரு குட் நியூஸ்…!! தங்கம் விலை திடீர் குறைவு…!!
மேலும், இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை முதலீடு செய்யலாம். மேலும், இத்திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதற்கு, 8.1% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதேபோல், 18 வயதிற்கு குறைவாக இருக்கும் ஆண் குழந்தைகள் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். மேலும், விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று, முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு கணக்கு தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























