Today Gold Rate: இன்று நகை வாங்குவோருக்கு ஒரு குட் நியூஸ்…!! தங்கம் விலை திடீர் குறைவு…!!
தமிழகத்தில் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நகை கடைகளில் தங்க நகைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இந்நிலையில் , கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்ததை தொடர்ந்து, இன்று விலை சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நகை வியாபாரிகள் இன்று அதிகளவில் லாபத்தை ஈட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (21.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 குறைந்து 1 சவரன் ரூ. 66,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,12,000 ஆகவும், 1 கிராம் ரூ. 112 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























