Post Matric Scholarship 2026: கல்லூரி மாணவர்களுக்கு முழு இலவசக் கல்வி! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0

Post Matric Scholarship 2026:
கல்லூரி கட்டணம் முழுவதும் இலவசம்!
மத்திய மற்றும் மாநில அரசின் அசத்தல்
கல்வி உதவித்தொகை!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, தங்களின் உயர்கல்விக் கனவோடு லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் (Arts, Science, Engineering, Medical, Diploma) சேர்ந்து வருகின்றனர். ஆனால், வறுமை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரிப் படிப்பிற்கான கட்டணங்களைச் செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன.இத்தகைய மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மிக முக்கியமான திட்டம் தான் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் (Post Matric Scholarship Scheme).
இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிலும் மாணவர்களுக்கான அட்மிஷன் கட்டண விலக்குகள் மற்றும் நிதியுதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நன்மைகள் (Key Benefits):

  • முழு கல்விக் கட்டண விலக்கு:
    சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் (Self-Financing & Govt-Aided Colleges) கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டாய மற்றும் திரும்பப் பெற முடியாத கட்டணங்கள் (Compulsory Fees) முழுவதையும் அரசே ஏற்கும்.
  • பராமரிப்புப் படி (Maintenance Allowance):
    மாணவர்களின் தினசரி மற்றும் விடுதிச் செலவுகளுக்காகப் படிப்பிற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை பராமரிப்புப் படியாக நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் (DBT மூலம்) செலுத்தப்படும்.
  • பயன்பெறும் படிப்புகள்:
    11 மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு (UG), முதுகலை (PG), மற்றும் அனைத்து தொழில்முறை படிப்புகளுக்கும் (Engineering, Medical) இது பொருந்தும்.

பிரிவுகளின் கீழ் தகுதிகள் மற்றும் வருமான வரம்பு (Eligibility Criteria):

1. SC / ST மற்றும் கன்வெர்ட்டட் கிறிஸ்டியன் மாணவர்கள்:
  • தகுதி:
    பட்டியலின (SC), பழங்குடியின (ST) மற்றும் ஆதிதிராவிடர் மதமாறிய கிறிஸ்டியன் (SCC) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • குடும்ப வருமான வரம்பு:
    பெற்றோரின் மொத்த ஆண்டு வருமானம் ₹2,50,000/-க்குள் இருக்க வேண்டும்.
2. BC / MBC / DNC மாணவர்கள்:
  • தகுதி:
    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • குடும்ப வருமான வரம்பு:
    பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2,50,000/-க்குள் இருக்க வேண்டும்.
  • கூடுதல் வசதி:
    அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான விடுதி மற்றும் உணவுச் செலவுகளும் (Boarding & Lodging Charges) இதில் கவராகும்.
3. சிறுபான்மையினர் (Minority Students):
  • தகுதி:
    முஸ்லிம், கிறிஸ்டியன், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்.
  • குடும்ப வருமான வரம்பு:
    பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2,00,000/-க்குள் இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான முக்கிய ஆவணங்கள் (Required Documents):
  1. ஆதார் அட்டை (Aadhaar Card)
  2. சாதிச் சான்றிதழ் (Community Certificate)
  3. நடப்பு ஆண்டின் வருமானச் சான்றிதழ் (Income Certificate)
  4. முந்தைய கல்வி மதிப்பெண் சான்றிதழ் (Marksheets)
  5. கல்லூரி சேர்க்கை மற்றும் போனஃபைட் சான்றிதழ் (Bonafide Certificate)
  6. மாணவரின் பெயரில் உள்ள அவுட்டிங் இல்லாத வங்கி கணக்கு விவரங்கள் (ஆதாருடன் இணைக்கப்பட்டது)
விண்ணப்பிக்கும் முறை மற்றும் நேரடி லிங்க் (How to Apply):
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளே (Nodal Officers மூலம்) மாணவர்களின் விவரங்களை வாங்கி இதற்கான பிரத்யேக மாநில உதவித்தொகை போர்ட்டலில் ஆன்லைனில் நேரடியாகப் புதுப்பித்துவிடுவார்கள். இருப்பினும், சிறுபான்மையினர் மற்றும் பிற மத்திய அரசு சார்ந்த போஸ்ட் மெட்ரிக் திட்டங்களுக்குத் தேசிய உதவித்தொகை போர்டல் (NSP) வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!