பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் அரசு.. விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்க..!!
தமிழக அரசு சாமானிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு 2025 – நேர்காணல் மூலம் தேர்வு!
அதாவது, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் SC/ST பிரிவினருக்கு வழங்கப்படும் 2024-25 கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் மே 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் https://umis.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாணாக்கரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், 2024 – 25 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடம் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























