தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 31க்கு பிந்தைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை 26 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் பலனாக மாநிலம் முழுவதும் உள்ளவர்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – CEO செயல்முறைகள்!

அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் கம்பர் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டதாக கூறிய அவர் கம்பர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர் எனவும் அவர் கவி திறமையை உலகம் முழுக்கும் அறிவார்கள் என்று கூறினார். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்பட்டு உள்ளது, கட்டுப்பாடுகள் எதுவும் பெரிய அளவில் தற்போது இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தற்போது ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு ஆலோசனை நடக்க உள்ளதாகவும் கூறினார்.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை நாடுகளிலும்,அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்து தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதை கருத்தில் கொண்டு அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார். இந்த தகவல் அடிப்படையில் நாம் இன்னும் முழு அளவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரவில்லை என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. எனவே பொது மக்கள் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார். தமிழகத்தில் 1.30 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள், முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வரும் சனிக்கிழமை 26 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!