
மாணவர்களே.., பிணையமே இல்லாமல் 7.5 லட்சம் கல்விக்கடன் வேண்டுமா…? அப்போ இந்த அற்புதமான திட்டத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க…
தற்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு மாணவர்கள் சரியான நிதி வசதி இல்லாமல் தங்களது கல்வியே பாதியிலே நிறுத்துகின்றனர். இதற்காக அரசு பல்வேறு கல்விக்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அதில் பல திட்டங்களுக்கு பிணையம் கேட்கப்படுவதால் அதுவும் எட்டாக்கனியாக மாறிவிடுகிறது. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா மத்திய அரசுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து கீழே விரிவாக காணலாம்.
ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்…!! இனி எல்லாமே ஈஸி தான் போங்க…!!
அதாவது, மத்திய அரசு அறிமுகப்படுத்திய “பிரதான் மந்திரி வித்யாலட்சுமி யோஜனா” திட்டத்தின் கீழ் கல்விக்கடன் வழங்குவதாக பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. மேலும், அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 860 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவோர் இத்திட்டத்தின் கீழ் பலன் பெற தகுதியுடையவர்கள் ஆவார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித பிணையமும் இன்றி ரூ 7.5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்திய அரசாங்கம் மாணவர்களின் கடனுக்கு 75% உத்தரவாதம் வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தின் செயல் முறைகள் அனைத்தும் டிஜிட்டல் மாயமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.vidyalakshmi.co.in/Students/ என்ற போர்ட்டலுக்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Join the ExamsDaily Whatsapp Group


























