ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்…!! இனி எல்லாமே ஈஸி தான் போங்க…!!
இந்தியாவில் ஆதார் என்பது ஒரு தனிப்பட்ட அடையாள ஆவணமாக உள்ளது. மேலும், எங்கு சென்றாலும், என்ன புது ஆவணங்கள் வாங்க வேண்டும் என்றாலும் ஆதாரே அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. அத்துடன், அந்த சமயங்களில் ஆதார் சரிபார்ப்பு செய்வதற்கு வெகுநேரம் எடுக்கிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே மத்திய அரசு தற்போது புதிய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
தமிழகத்தில் நாளைய (31.03.2025) மின்தடை பகுதிகள்…!! வெளியான லிஸ்ட் இதோ..!!
அதாவது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், “Adhaar Good Governance” என்ற புதிய டிஜி போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும் ஆதார் சரிப்பார்ப்பு கோரிக்கைகளை எளிமையாக்கவும், செயலை துரிதப்படுத்தவும் திருத்தப்பட்ட ஆதார் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். தகுதியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் https://www.meity.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து ஆதார் சரிபார்ப்பு சேவையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த சேவையினை அரசு மற்றும் தனியார் விருந்தோம்பல், சுகாதாரம், இ- காமர்ஸ், கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன், இது பொது மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், அதனை பயன்படுத்தும் போது ஆதார் சட்ட விதிகளை பின்பற்றுவது என்பது கட்டாயமாகும்.



























