ரூ.7,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!

0
ரூ.7,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!
ரூ.7,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!
ரூ.7,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!

மத்திய பிரதேசத்தில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

அடிக்கல் நாட்டுதல்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். ஆகார அனுதன் யோஜனா திட்டத்தின் கீழ் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கான மாத தவணை தொகை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் மத்திய பிரதேசத்திற்கு மேற்கொள்ளும் இந்த பயணம், வளர்ச்சிக்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் எக்ஸ் சமூக ஊடக பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி.பி.எஸ்ஸில் சுங்க கட்டணம் வசூல் – வாகன ஓட்டிகள் ஹாப்பி!

பிரதமரின் இந்த பயணத்தில், நீர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார். ரயில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பயண நேரம் குறையும் வகையிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதாவது மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!