காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியின் பயணம் ரத்து.. வெளியான முக்கிய தகவல்..!!
காஷ்மீரில் நேற்று (22-04-2025) நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி விமான நிலையத்தில் இந்த தாக்குதல் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் “இதன் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அரசு பயணம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு – முக்கிய தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளே…!!
அதாவது, ஏப்ரல் 19 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள இருந்த பிரதமர் மோடி மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “கான்பூரில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்ட நாளை (25-04-2025) உத்தரப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்த பிரதமரின் பயணம், காஷ்மீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பிற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது”.


























