
எல்ஐசி நிறுவனத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு.. புதிய திட்டத்தால் மகிழ்ச்சியில் பெண்கள்…
பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களுக்கு எல்ஐசி நிறுவனத்தில் ஏஜென்ட் மற்றும் டெவலப்மென்ட் ஆபிஸர் பதவி வழங்கும் திட்டம் ஒன்றை நேற்று (09-12-2024) அறிமுகப்படுத்தினார். இந்த திட்டமானது கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும், அவர்களுக்கான நிதி ஆதாரத்தை மேன்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதல் ஆண்டு முழுவதும் ஏஜெண்டாக பணியாற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.7,000 ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் அவர்களுக்கு கூடுதல் கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
” I Don’t Know “… விசிக- தவெக கூட்டணி குறித்து கூல்லாக பதில் சொன்ன திருமாவளவன்.. முழு விவரம் உள்ளே..
மேலும், முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பெண்களுக்கு காப்பீடு ஏஜென்ட் பணி வழங்கப்படும் எனவும், இது வருங்காலத்தில் ரூ.50 ஆயிரம் வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் ஹரியானாவில் தொடங்கி பின் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், “பீமா சகி யோஜனா திட்டத்தின்” கீழ் பெண்கள் விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 50 எனவும், குறைந்தபட்சமாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு தொழில் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்கிறது.























