PKL 2024 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி.. மேஜிக் செய்த பெங்களூரு புல்ஸ்!!
புரோ கபடி தொடரின் 11-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இத்தொடரின் 69வது ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை எதிர்த்து பெங்களூரு புல்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது.
ஆனாலும் சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது. மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதி வரை சென்ற இந்த போட்டி 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
























