ஹைபிரிட் மாடலை ஒப்புக்கொண்ட பிசிபி.. இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடவிருக்கும் இடம் இதுவா..?
ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 யில் இந்திய பாகிஸ்தான் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முதலில் தயக்கம் காட்டினாலும், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போட்டிகளை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.
அதாவது இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்வதாக விடுத்த அறிக்கைக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு நடுநிலையான இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE) தேர்வு செய்துள்ளது என்று பிசிபி செய்தித் தொடர்பாளர் “அமீர் மிர்” தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் மோதல் போட்டி வருகின்ற பிப்ரவரி 23, 2025 ஆம் தேதி நடைபெற உள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


























