இனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார்கள் வாங்க முடியும்…போக்குவரத்து ஆணையம் அதிரடி அறிவிப்பு
சென்னை போக்குவரத்து கழகம், சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது சென்னை சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இவற்றை தவிர்க்கும் வண்ணம் சென்னை போக்குவரத்து ஆணையம் சில கட்டுப்பாடுகளை உருவாக்கி, விரைவில் அமலுக்கு கொண்டு வருமாறு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பேருந்துகளில் பயணிக்க 2000 ரூபாய் பஸ் பாஸ்கள் அறிமுகம்…தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அதாவது, “இனிமேல் சென்னையில் புதிதாக கார்கள் வாங்குபவர்கள், பதிவு செய்யும் போது, அதனை நிறுத்துவதற்கான இட வசதி இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்றும், ஒன்றிற்கு மேற்பட்ட கார்கள் வாங்கினால், அதற்குரிய போதுமான நிறுத்துமிட வசதியை உறுதி செய்த பின்னரே கார்களை பதிவு செய்யவும்”அறிவுறுத்தியுள்ளது. மேலும், “சென்னையில் உள்ள குடியிருப்பாளர்கள், மால்கள் மற்றும் அலுவலகங்களிலும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி இல்லையென்றால், கட்டாயம் உருவாக்க வேண்டும்” என்றும் பரிந்துரைத்துள்ளது.
























