“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ரௌடிகளை அடித்து நொறுக்கிய கதிர் – படப்பிடிப்பு வீடியோ வைரல்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை அடித்த ரௌடிகளை கதிர் அடித்து நொறுக்கிய சண்டை காட்சிகள் எவ்வாறு படமாக்கப்பட்டது என்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பமாக தற்போது சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் கண்ணன் மீனாவின் அப்பா கடையில் பணம் திருடியதாக குற்றம் சாட்ட, அவர் திருடவில்லை என சிசிடிவி காட்சிகளை வைத்து மீனா நிரூபிக்கிறார். அடுத்ததாக ஜனார்த்தனன் கடை பையனை அடித்து வேலையை விட்டு துரத்தி விட்டு, கதிர் ஜீவா அவரை ரோட்டில் பார்த்து அடிக்கின்றனர். அதனால் கோவப்பட்ட அவன் கண்ணனை ரௌடிகளை வைத்து அடிக்கிறார்.
பாரதி, கண்ணம்மாவை மீண்டும் சந்தித்த நீதிபதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணன் பயங்கரமாக அடிபட்டு இருக்க, கோவத்தில் இருந்த கதிர் ரௌடிகளை தேடி அடிக்கிறார். சினிமா பாணியில் கதிர் சண்டையிடம் காட்சி படமாக்கப்பட்டது. சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எப்போதும் போல சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டாலும் கேமரா மேன் எடுக்கும் விதத்தில் தான் விறுவிறுப்பு அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் ஒரு சண்டை காட்சிகள் எடுக்க எத்தனை டேக் செல்கிறது.
விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த ‘கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்’ – ப்ரோமோ ரிலீஸ்!
இந்த வாரம் கயல் பாப்பாவின் பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். அதில் தனம் மூர்த்தி கயல் மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார்கள் என தெரிய இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை யாரவது பிரிக்க வந்தாலும், அவர்கள் ஒற்றுமையை பார்த்து நாளுக்கு நாள் வியந்து தான் செல்கின்றனர். மீனாவின் அப்பாவிற்கு கயல் பிறந்தநாள் மூலம் அது தெளிவாக தெரிய இருக்கிறது.