விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த ‘கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்’ – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த 'கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்' - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த 'கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்' - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த ‘கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்’ – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சியில், பிரபல சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ள “கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்” எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அதில் தனித்துவம் குறையாமல் இருக்கும். மேலும் அதில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் கன்டென்ட் கொடுக்கப்படும். பல சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வந்தாலும் பண்டிகை தினத்தன்று எந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கின்றனர் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி!

அன்று விஜய் டிவியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் “கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஸ்ரீதர், கருணாஸ் மனைவி க்ரேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா பிரசவத்திற்கு பின் முதன்முதலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பெண் தோழியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!

அதுமட்டுமில்லாமல் ராமர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கலக்கி இருக்கிறார். பின் வேற மாதிரி படம் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அந்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின் ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் பல நகைச்சுவையான டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here