கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு : பி. சுசிலா மற்றும் மு. மேத்தா தேர்வு ..!!
முத்தமிழறிஞர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆண்டுத்தோறும் வழங்கப்படும் கலைஞர் நினைவு விருதை இவ்வருடம் கூடுதலாக ஒரு பெண் கலைஞருக்கும் வழங்கிட, திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.07.2024 அன்று ஆணை பிறப்பித்தார்.
மார்ச் மாதத்தில் இருந்து 1.91 லட்சம் புதிய வீடுகள்..||” முதல்வரின் அசத்தல் அறிவிப்பு”
இந்நிலையில், அக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ் பேராசிரியரும் புதுக்கவிதை வித்தகருமான மு. மேத்தா அவர்களுக்கும், திரைப்பட பாடகி பி. சுசீலா அவர்களுக்கும் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இவ்விருது வரும் 30 ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்
























