IPL சீசன் 15: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர் தான்? ரோஹித் விளக்கம்!

0
IPL சீசன் 15: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர் தான்? ரோஹித் விளக்கம்!
IPL சீசன் 15: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர் தான்? ரோஹித் விளக்கம்!
IPL சீசன் 15: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர் தான்? ரோஹித் விளக்கம்!

வரவிருக்கும் ஐபிஎல் 2022 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தன்னுடன் யார் பேட்டிங்கை தொடங்குவார் என்ற விவரங்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காண்போம்.

ரோஹித் ஷர்மா

IPL வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்று மற்ற அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடிய ஒரு அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் (MI) தான். பல ஆண்டுகளாக IPL போட்டிகளில் இடம்பெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்கி வருகிறார். எப்போது, MI அணி சார்பில் இன்னிங்க்ஸை துவங்கி வைக்கும் பொறுப்பு கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு உரியதாகும். இவருடன் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கும் இணைந்து நல்ல பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினால் மைதானத்தில் ஸ்வாரசியங்களுக்கு பஞ்சம் இருக்காது.

IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பிளேயிங் 11 அணி – ஆகாஷ் சோப்ரா கருத்து!

ஆனால் இந்த ஆண்டு, டி காக் இல்லாமல் MI அணி ஒரு புதிய பேட்ஸ்மேனுடன் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து யார் பேட்டிங்கை துவங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த ரகசியத்தை உடைத்திருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. இது குறித்து அவர் பேசும் போது, ‘MI அணிக்காக நான் பேட்டிங்கை துவங்குவேன். இந்த முறை இஷான் கிஷானுடன் ஓப்பன் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் ரோஹித் ஷர்மாவுடன் இன்னிங்ஸை துவக்குவது இஷான் கிஷான் என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது. கிஷான், கடந்த காலங்களில் பெரும்பாலும் மிடில்-ஆர்டர் பேட்டராக பயன்படுத்தப்பட்டிருந்தார். என்றாலும் ஒரு சில சமயங்களில் மட்டும் அவர் முதல் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி இருக்கிறார். இப்போது அணியின் மாற்றம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே பேசுகையில், ‘ரோஹித் மற்றும் இஷான் ஜோடி சிறந்த கலவையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இஷானும் ஒரு விக்கெட் கீப்பர். இவரை தவிர இன்னும் ஒரு சிலரே உள்ளனர். அதனால் வேறு யார் முதல் மூன்று இடங்களில் பேட் செய்ய முடியும்’ என்று கூறி இருக்கிறார்.

அந்த வகையில், மார்ச் 27ம் தேதியன்று நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில், எப்போதும் 3வது இடத்தில் களமிறங்கும் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மாவின் புதிய இன்னிங்ஸை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் IPL 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. இவர்களை தவிர 21 பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டு மொத்தம் 25 பேர் கொண்ட MI அணி உருவாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டெவால்ட் ப்ரீவிஸ், பசில் தம்பி, முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, என் திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், அன்மோல்ப்ரீத் சிங், ரமன்தீப் சிங், ராகுல் புத்தி, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆர்யன் ஜூயல், ஃபேபியன் ஆலன்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!