ஜூலையில் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் – முக்கிய தகவல் இதோ!!

0
ஜூலையில் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் - முக்கிய தகவல் இதோ!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் மூலம் 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 15ம் தேதி சரியாக வங்கி கணக்கில் ரூ.1000/- வரவு வைக்கப்பட்டு விடும். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு மீண்டும் மறு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் சேர்க்கை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் மீண்டும் துவங்கி உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி ஜூன் மாதம் 2வது வாரம் வரை அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், அதன் பின்னர் தகுதியானவர்கள் பெயர் பரிசீலனை அடிப்படையில் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவைடய சில காலம் தேவைப்படும் என்பதால், புதிதாக இணைவோருக்கு ஜூலை மாதம் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திட்டத்தில் பயன் பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு சரியாக வரவு வைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!