திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!

0
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு - கொரோனா பரவல் எதிரொலி!!
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு - கொரோனா பரவல் எதிரொலி!!
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!

கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் பாதியளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனுமதி

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையாக மத வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கோவிலுக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் அரசின் பொது கட்டுப்பாடுகளுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. பக்தர்களின் இலவச தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி கோவிலில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்ய 300 ரூபாய் செலவில் ஆன்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்திருக்க வேண்டும். அதன் படி முன்பதிவு செய்துள்ளவர்களில் தினசரி தரிசனத்துக்கு 30000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசனம் பாதியாக குறைக்கப்பட்டு, தற்போது 15000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மே மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here