ONGC ஆணையத்தில் Apprentice வேலை – 2200+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

ONGC ஆணையத்தில் Apprentice வேலை – 2200+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் எனப்படும் ONGC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 2236 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியான 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Apprentices பணிக்கென காலியாக உள்ள 2236 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Diploma / Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,000/- முதல் ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!