இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்க போகுதா..? அப்படினா என்ன..? முழு விவரம் உள்ளே..!!
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் தேர்தல் முறையே “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று அழைக்கப்படுகிறது . இத்தகைய தேர்தலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி கீழே விரிவாக பார்ப்போம்
முக்கிய நன்மைகள்:
1. அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்.
TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.. முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
2.தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல விரிவான பிரச்சாரம் நடத்தப்படும் மேலும், ஒவ்வொரு 5 வருடங்களில் 3 மாதம் மட்டுமே தேர்தல் காலமாக இருக்கும் மேலும் இதனால் நாட்டின் நிர்வாகம் பாதிப்படைவதை தவிர்க்க முடியும்.
3. மேலும், இத்தகைய தேர்தல் மூலம் செலவுகள் குறையும், அதிகப்படியான வாக்காளர் பங்கேற்பு மற்றும் நிர்வாக திறமை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



























