NPCIL நிறுவனத்தில் 120+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!!
இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship பணிகளுக்கு காலியாக உள்ள 122 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NPCIL பணியிடங்கள்:
Apprenticeship பணிக்கென காலியாக உள்ள 122 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Trade Apprentice – 92 பணியிடங்கள்
- Diploma Apprentice – 14 பணியிடங்கள்
- Graduate Apprentice – 16 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ITI / Diploma / Graduate (Non-Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NPCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























