தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – நகைக்கடைக்கு படையெடுக்கும் தாய்மார்கள்!
சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி காரணத்தினால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. மேலும், வார இறுதி நாட்களில் கூடுதலாக தங்கத்தின் விலை உயர்ந்து பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
இந்நிலையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ. 5460க்கும், சவரனுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.43,680 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 75.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்றைய தங்க விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5460 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.43,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ரூ.76.70 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.