NLC நெய்வேலி 877 Apprentice காலிப்பணியிடங்கள் – ரூ.12,524/- உதவித்தொகை || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தொழிற் பழகுநர் பயற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை NLC நெய்வேலி நிறுவனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 10.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NLC நெய்வேலி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 736 பணியிடங்கள் காலியாக உள்ளன. NLC Non-Engineering Graduate Apprentice பதவிக்கு என மொத்தம் 141 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14 வயதை பூர்த்தி அடைந்தவாராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNPSC Accounts Officer வேலைவாய்ப்பு 2023 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,09,200/-
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ITI- யில் (NCVT/SCVT) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி PASAA trade க்கு COPA வில் தேர்ச்சி (NTC/PNTC சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்) பெற்றவர்கள் Trade Apprentices பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 2019/2020/2021/2022/2023 ம் வருடத்தில் B.Com/ B.Sc.(Comp.Sci.)/ B.C.A/ B.B.A./ B.Sc.(Geology) Non-Engineering Graduate Apprentice பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- PASAA – ரூ.8,766/-, மற்ற Trade Apprenticeship பணிகளுக்கு ரூ.10,019/- மற்றும் Non-Engineering Graduate Apprentice பணிகளுக்கு ரூ.12,524/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.nlcindia.in/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 10.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை print out எடுத்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து 15.11.2023 க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.