NIACL ஆணையத்தில் Apprentices வேலை – 320+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
New India Assurance Company Limited எனப்படும் NIACL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 325 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Apprentices பணிக்கென காலியாக உள்ள 325 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNHRCE ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Online Test (objective type)/Regional Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.10.2024 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























