BSNL குறைந்த விலையில் அதிரடி சலுகை – புதிய அறிமுகம்!
BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் குறைந்த விலையில் பல சலுகைகள் உள்ள புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.
அதிரடி சலுகை:
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பலர் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் திறக்காததால், பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்படுகிறது. இதனால் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – மல்டி டிவைஸ் சிஸ்டம்!
BSNL நிறுவனம் மிகவும் குறைந்த விலையில், அதிக சலுகைகள் கொண்ட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.45 க்கு விற்கப்படும் ரீசார்ஜ் கூப்பனில் இந்த அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த திட்டம் விளம்பர நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட குறுகிய கால திட்டமாகும். இந்த திட்டத்தில், 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இது போன்று மேலும் பல சலுகைகளையும், BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ரூ.249 விலையில் பிரீபெயிட் சலுகையில், 60 நாட்கள் வேலிடிட்டியில், தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் பேக் முடிவடைந்த பிறகு வாடிக்கையாளர்கள் மற்ற சலுகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி வரை மட்டுமே அறிமுக சலுகை வழங்கப்படும். ஜூலை 31ம் தேதி வரை இலவச சிம் கார்டுகளையும் BSNL வழங்கி வருகிறது.