
புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா அறிவிப்பு…!! பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்
ராமேஸ்வரத்தில் உள்ள பழைய பாம்பன் பாலம் கடந்த 100 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்ததால், கடல் உப்பு நீர் அரிப்பு காரணமாக பழுதடைந்தது. இதனால், ராமேஸ்வரம் கடலின் நடுவே ரூ. 550 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அதன்பின், கோரோனோ பெருந்தொற்று காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலமாக பல தடைகளுக்கு பின், தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்பொழுது..? சற்று முன் வெளியான முக்கிய அப்டேட்..!!
ஆனால், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் பணி நிறைவடையாததால், பலமுறை இதன் திறப்பு நிகழ்ச்சி தள்ளி போனது. இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளார் ஆர். என் சிங் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்பிறகு, ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்திபெற்ற இராமநாத சுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.























