
பட்டா பதிவில் புதிய வசதி அறிமுகம்.. இனி வீட்டிலிருந்த படியே மாற்றம் செய்யலாம்.. வெளியான முக்கிய தகவல்..!!
பட்டா ஆவணம் என்பது தனிநபர் ஒருவர் தனது நிலத்தின் சட்டப்பூர்வமான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சான்றாகும். மேலும், நிலத்தை வாங்குவது, விற்பது அல்லது அடமானம் வைப்பது போன்ற அனைத்து பரிவர்த்தனைகளிலும் பட்டா முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கிராமம் மற்றும் நகர்புறங்களில் பல்வகையான நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணையவழிச் சேவைகள் நிலவரித்திட்ட துறையால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பட்டா பதிவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது “பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க eservices.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடவும், இணையதளம் மூலம் பெற்றப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும், வட்டாட்சியர்களுக்கு வழிகாட்டுதலின் படி இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது”.

























