இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் – சுசில் சந்திரா பதவியேற்பு!!

0
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் - சுசில் சந்திரா பதவியேற்பு!!
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் - சுசில் சந்திரா பதவியேற்பு!!
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் – சுசில் சந்திரா பதவியேற்பு!!

நாட்டில் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த சுனில் அரோராவின் பதவிக்காலம் நேற்றுடன் (ஏப்ரல் 12) முடிவுக்கு வந்த நிலையில் தற்போது புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா பதவி ஏற்றுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர்:

இந்திய நாட்டின் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகித்து வந்தார். இவரது பதவிக்காலம் நேற்று (ஏப்ரல் 12) உடன் முடிவுக்கு வந்தது. இவரது பணிக்காலத்தில் தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. கொரோனாவிற்கு மத்தியில் இவரது பணிக்காலத்தில் மிக சிறப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இவர் இந்திய நாட்டின் 23வது தலைமை தேர்தல் ஆணையராக திகழ்ந்தார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தேர்தல் தலைமை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் அதிகாரியை நியமிப்பதே வழக்கம். தற்போது அந்த வகையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா பதவி ஏற்றுள்ளார். இவர் இந்திய நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிஇஓ சுற்றறிக்கை!!

அதன்படி புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா இன்று (ஏப்ரல் 13) பதவி ஏற்றுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு 2022 மே 14ம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் உத்திரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு 2022 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. எனவே இவரது பணிக்காலத்தில் இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here