தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிஇஓ சுற்றறிக்கை!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சிஇஓ சுற்றறிக்கை!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சிஇஓ சுற்றறிக்கை!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிஇஓ சுற்றறிக்கை!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தும் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சிஇஓ அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு நடவைடிகைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது தீவிரபடுத்தப்படுகிறது. அதுமட்டும்மல்லாமல் மாவட்டங்கள் தோறும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவதற்கு கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!!

மேலும் கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளி, (12ம் வகுப்பு தவிர்த்து) கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்கள், பிற பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

வேலூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  மேலும் பள்ளி மற்றும் பள்ளி அலுவலகத்தில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆதார், பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!!

எனவே தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தங்களுக்கு அருகே உள்ள சுகாதார மையம் அல்லது வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று தடுப்பூசியை செலுத்த அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இணையத்தில் பதிவிடுமாறு தலைமையாசிரியர்களுக்கு சிஇஓ குணசேகரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here