நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?

1
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?

தேசிய தேர்வு முகமை NTA தகவலின் படி, சுமார் 15.93 லட்சம் மாணவர்கள் NEET UG 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஹால் டிக்கெட் மார்ச் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிளஸ் 1 தேர்விலும் அனைவரும் தேர்ச்சி ???

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்கான தேர்வுகள், பள்ளி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி முறை நேற்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. திட்டமிட்டபடி நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட வேண்டும். ஆனால், நாளை ஹால் டிக்கெட் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று இரண்டாம் நாள் – நிலைமை என்ன !!!

மேலும் NEET UG 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களிடம் இருந்து மே மாதம் நடத்தப்படும் நீட் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தேசிய தேர்வு முகமை தரப்பிலும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்நிலையில் நாளை ஹால் டிக்கெட் வெளியாக வாய்ப்புகள் குறைவு. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கக்கட்டணம் தேவையில்லை ! – தொடரும் அறிவிப்புகள்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!