‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 1 முதல் ஆரம்பம் !!

0
‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 1 முதல் ஆரம்பம் !!
‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 1 முதல் ஆரம்பம் !!

‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 1 முதல் ஆரம்பம் !!

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை தடை செய்ய தமிழக அரசு தொடர்ந்து போராடி வரும் நிலையில், தேர்வை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நீட்’ தேர்வு இலவச பயிற்சி

இதையடுத்து கடந்த ஆண்டு இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை எழுதினார்கள். அவர்களில் 1,633 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதனால் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த ஆண்டை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனமே வழங்க இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட இருக்கிறது.

பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகளின் பெயர், முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை பெற்று உடனடியாக பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதிகளவிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த இலவச ஆன்லைன் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று தெரித்துள்ளார். எனவே நீட் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் தங்களது பள்ளி ஆசியர்களை தொடர்பு கொண்டு இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!