CA படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதும் !!

0
CA படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதும் !!
CA படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதும் !!

CA படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதும் !!

பட்டய கணக்காளர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடிப்படை தேர்ச்சி ஆனது இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதனால் மாணவர்கள் மகிழ்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்த தகவல்களினை கீழே வழங்கியுள்ளோம்.

பட்டய கணக்காளர் (CA) பாடங்கள் :

Accountancy பாடத்தை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் (CA) படிப்பே மிகவும் உரித்தான ஒன்றாகும். இந்த படிப்பில் சேர நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பங்களை சமர்பிப்பர். முன்னதாக ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, CA படிப்பில் சேர முடியும்.

ஆனால் தற்போது இப்படிப்பில் சேர்வதற்கான தகுதியில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் காரணமாக இந்திய பட்டய கணக்காளர் மையம் இது குறித்த ஒரு புதிய அதிரடி அறிவிப்பினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

மாணவர்கள் மகிழ்ச்சி !

இந்திய பட்டய கணக்காளர் மையத்தில் கடந்த 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டய கணக்காளர் ஒழுங்குமுறை விதிகள் 25 பிரிவில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ள நிலையில், பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12ம் வகுப்பு கல்வித்தகுதியாக இருந்தது தற்போது 10ம் வகுப்பாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வியாண்டு முதலே இது நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதியானது, 10ம் வகுப்பாக குறைக்கப்பட்டு உள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே இருந்த 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு அதிக வரவேற்பு இருந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பாக தகுதி குறைக்கப்பட்டதற்கு மிகப்பெரிய வரவேற்புகள் கிடைக்கும் என்றே தெரிகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!