மாணவர்களின் கவனத்திற்கு.. நாளை நடக்கவிருக்கிறது நீட் நுழைவுத்தேர்வு..!!
நீட் நுழைவுத் தேர்வு என்பது மருத்துவக் கல்வி படிப்புகளான MBBS, BDS, BAMS, BSMS, BUMS, BHMS போன்ற படிப்புகளில் சேர இந்திய அளவில் நடைபெறும் ஒரு பொது நுழைவுத் தேர்வாகும். இது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு நீட் நுழைவுத்தேர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாப்ட்.. தனது பிரபல செயலியை நிறுத்துவதாக அறிவிப்பு..!!
அதாவது, “2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை (04-05-2025) நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வானது நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 வரை நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தகவல்களுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்” என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.



























