CBSE பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்…!! இதற்கு NCERT சொன்னது என்ன தெரியுமா..?

0
CBSE ???????????????????? ????????? ?????...!! ?????? NCERT ??????? ???? ????????..?
CBSE பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்...!! இதற்கு NCERT சொன்னது என்ன தெரியுமா..?

CBSE பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்…!! இதற்கு NCERT சொன்னது என்ன தெரியுமா..?

மத்திய அரசின் இடைநிற்றல் கல்வி வாரியத்திற்கான (CBSE) பாடப்புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படும் (NCERT) ஆனது உருவாக்குகிறது. இந்நிலையில், இந்த NCERT கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை வெளியிட்டது. அதில், ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு “மிருதங், சந்தூர்” எனவும், கணித புத்தங்களுக்கு “கணித பிரகாஷ், கணித மேளா” எனவும் மற்ற பாடங்களுக்கு “பூர்வி, கிருதி, சிதார்” எனவும் பெயரிப்பட்டு இருந்தது. இந்த பெயர்கள் பெரும் சர்ச்சை ஆன நிலையில், NCERT இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

IPL 2025 CSK vs MI: போட்டியில் வெல்லப்போவது யார்..?? மீண்டும் ஃபார்முக்கு திரும்புமா CSK..?? எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

NCERT அதன் அதிகாரப்பூர்வ X தளப் பக்கத்தில், “புத்தகங்களின் பெயர்கள் இந்திய மொழியில் இருந்து வந்தவை எனவும், குறிப்பாக இந்தி மொழியிலிருந்து அல்ல” எனவும், “1 மற்றும் 2 வகுப்புகளுக்கான ஆங்கில பாடப்புத்தகதிற்கு கர்நாடக இசையுடன் தொடர்புடைய பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தாள வாத்தியமான மிருதங்கத்தில் இருந்து பெறப்பட்ட “மிருதங்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்றும், “பூர்வி என்ற பெயர் , அந்தி வேளையில் பாடப்படும் ஒரு ராகத்தை குறிப்பதாகவும்”, அதே போல், “கணித பிரகாஷ் என்ற கணித பாடப்புத்தகம் இந்தியாவின் வளமான கணித பாரம்பரியத்தில் இருந்து பெறப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!