செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு நாகலாந்து மாநில அரசு செப்டம்பர் 16ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் 3வது அலை எச்சரிக்கை காரணமாக சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாகலாந்து மாநில அரசு செப்டம்பர் 16 வரை அன்லாக்-5 செயல்முறைகளை நீட்டித்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு செப்.30 வரை விசா நீட்டிப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

அம்மாநில உள்துறை மூலம் வெளியிடப்பட்ட உத்தரவில், ஆகஸ்ட் 18 உத்தரவின் படி ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 16 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயாராக உள்ளது. ஆனால் இறுதி முடிவை உயர் அதிகார குழு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் மாநில கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஜூலை 26 முதல் மீண்டும் தொடங்கின.

Tokyo Paralympics High Jump – வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீன் குமார்!

தமிழகம், குஜராத், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் பண்டிகை காலங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுளள்து. பொதுமக்கள் அதிகம் கூடுவதை அனுமதிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!