முத்துாஸ் நர்சிங் கல்லுாரி மதுக்கரையில் துவக்கம்!
மதுக்கரையில் புதிய கல்வி முன்னேற்றமாக “முத்துாஸ் நர்சிங் கல்லுாரி” இன்று திறந்து வைக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கல்லுாரி, செவிலியர் படிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறந்த வாய்ப்பாக உருவாகியுள்ளது. தொடக்க விழாவில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ துறை நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
மாநிலப் போட்டிக்கு வடக்கலூர் அரசு பள்ளி மாணவி தேர்வு பெருமை பெற்ற கல்வி சாதனை!
இந்த கல்லுாரி உலகத் தரத்திற்கேற்ப நவீன ஆய்வகங்கள், பிராயோகம் அறைகள், மாணவர் விடுதிகள் மற்றும் நூலகம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. முத்துாஸ் நர்சிங் கல்லுாரி, மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மதுக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கல்வி துறையில் புதிய அலை எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























