பர்சனல் லோன் அப்ளை பண்ண போறீங்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்!
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு , சேமித்த பணத்தை எடுக்கவும் உதவி வருகிறது. அதேபோல் வங்கிகளில் பல்வேறு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன், விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன் என பல வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். தனி நபர் கடன் ஆனது நீங்கள் வாங்கும் சம்பளத்தின் 20 மடங்கு தொகையை கடனாக பெற முடியும்.
கோடீஸ்வரன் ஆக இப்படி ஒரு வழி இருக்கா? இது தெரியாம போச்சே!
இக்கடனை பெறுவதற்கு சம்பளச் சீட்டுகள், வருமான வரிக் கணக்கு (ITR), முகவரிச் சான்றுகள் மற்றும் PAN போன்ற பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் தனிநபர் கடனுக்கு அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. இது 12-18 சதவீதத்திற்குள் அடங்கும். சரியான வட்டி விகிதம் என என்பதை CIBIL ஸ்கோர் தீர்மானிக்கும். CIBIL ஸ்கோர் குறைவாக இருக்கும்போது அதிக வட்டியிலும், CIBIL ஸ்கோர் அதிகமாக இருக்கும் போது குறைவான வட்டியிலும் கடன் பெற முடியும்.

























