சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி - கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி - கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!

CSK கேப்டன் தோனி சூப்பர் ஹீரோவாக இடம்பெறும் கிராபிக் நாவலின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை எம் எஸ் தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது எம்எஸ் தோனியின் அதர்வா” படம் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் உற்சாகம்:

இந்தியாவின் பிரபலமான மிடாஸ் டீல்ஸ் தனியார் நிறுவனமும், விர்சு ஸ்டுடியோவும் இணைந்து மெகா பட்ஜட்டில் அதர்வா தி ஆரிஜின் கிராஃபிக் நாவலை தயாரித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் பார்மல் கேப்டனும் மற்றும் IPL தொடரில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இந்த நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் நடித்துள்ளார். MS தோனியின் இந்த புதிய அவதாரம் அனைத்து தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்.28 வரை மீண்டும் இரவு ஊரடங்கு & புதிய தளர்வுகள் அறிவிப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

தற்போது உள்ள சூழலில் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதால் அதனை ஊக்குவிக்க தோனியை வைத்து இந்த கிராஃபிக் நாவல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வாசகர்களுக்கு ஆழ்ந்த அனுபவத்தை வழங்கவும் தோனியை இதில் நடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ரமேஷ் தமிழ் மணி என்பவர் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை வின்சென்ட் அடைக்கலராஜ், அசோக் ஆகியோர் தயாரிக்கிறார்கள். மேலும், தோனியுடன் சேர்த்து 150-க்கும் மேற்பட்டவர்கள் இதில் நடித்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் ஆப் அறிமுகம்!

நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி MS தோனியின் அதர்வா மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டரை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தோனி ஒரு போர் வீரரைப் போல் இடம்பெற்றுள்ளார். தற்போது எம்எஸ் தோனியின் அதர்வா” படம் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரை தோனியின் ரசிகர்கள் இணையதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!