இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

0
இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

தமிழக பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மகளிர் உரிமை தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழுக்கு தொன்று ஆற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இத்திட்டத்தில் வயது முதிர்ந்த காலத்தில், வறுமையில் இருந்து பாதுகாத்து கொள்ள, மாதந்தோறும் ரூ. 3500 உடன் மருத்துவப்படி ரூ. 500ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான சலுகையும் தமிழக அரசு வழங்குகிறது. ஒருவேளை, உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் நாமினி ரூ. 3000 உதவித்தொகையாக பெற்று கொள்ளலாம். குறிப்பாக, மகளிர் உரிமை தொகை மற்றும் சமூக ரீதியாக உதவி தொகைகளை பெறுபவர்கள், இந்த திட்டத்தில் இணைய முடியாது. மேலும், இதனை பற்றிய முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப விதிமுறைகள் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

NTPC நிறுவனத்தில் Deputy Manager வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || 250 காலிப்பணியிடங்கள்!

அதாவது, 2024-25 ஆண்டின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், இத்திட்டத்தில் இணைய விரும்பும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 01.01.2024 தேதியின் படி 58 வயது நிறைவடைத்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. 72,000 மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தமிழ்ப்பணி ஆற்றியதற்கான அல்லது ஆற்றி வருவதற்கான சான்றுகளை 2 தமிழறிஞர்களிடம் பெற்று விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு , வருமான சான்று, திருமணமானவர்கள் என்றால், துணைவரின் ஆதார் அட்டை முதலியவற்றின் நகலை விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும். மேலும், உதவித்தொகை விண்ணப்படிவத்தை மண்டல/ மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை/உதவி இயக்குநரிடம் நேரடியாகவும் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற லிங்க் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பித்த விண்ணப்பங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் மண்டல/மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!