தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு – பிரதமர் மோடி புகழாரம்!!

0
தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு - பிரதமர் மோடி புகழாரம்!!
தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு - பிரதமர் மோடி புகழாரம்!!
தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு – பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி NCC பேரிடர் காலத்தில் பெரும் பங்கு வகிப்பதாக புகழ்ந்து கூறியுள்ளார்.

தேசிய மாணவர் படை:

டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி அங்கு அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின் கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். பின்னர் தேசிய மாணவர் படையை குறித்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள், மக்களுக்கு பெருமளவில் உதவி செய்துள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு – அரசாணை வெளியீடு!!

கொரோனா காலகட்டத்திலும் இந்த மாணவர்கள் அரசுடனும், மக்களுடனும் இணைத்து பல சேவைகளை செய்துள்ளனர். இந்த படையை மேலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாட்டின் கடலோர எல்லைப் பகுதிகளில் உள்ள மாணவர்களை இந்த படையில் சேர்த்து நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது.

DRDO செயற்கை நுண்ணறிவு & சைபர் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

இதன் முதல்கட்டமாக நாட்டின் எல்லை மற்றும் கடற்கரையில் உள்ள 175 மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேசிய மாணவர் படையில் முக்கிய பங்கினை வகிப்பார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஒரு லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3ல் ஒரு பங்கு பெண்கள் பயிற்சியில் உள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!