உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு – அரசாணை வெளியீடு!!

0
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு - அரசாணை வெளியீடு!!
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு - அரசாணை வெளியீடு!!
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு – அரசாணை வெளியீடு!!

தமிழக அரசின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான தற்காலிக பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு:

தமிழக அரசின் கீழ் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு வழங்க தமிழக அரசிடம் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தமிழக அரசு தற்போது உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை பணி மூப்பு அடிப்படையில் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது.

DRDO செயற்கை நுண்ணறிவு & சைபர் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

இந்த அறிவிப்பின்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தகுதியான படிப்பு முடித்த ஆசிரியர்கள் பணிக்காலம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான தற்காலிக பட்டியலை தயார் செய்யப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி – அரசாணை வெளியீடு!!

இந்த அறிவிப்பின் படி வெளியிடப்பட்ட தற்காலிக பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அது குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் 30.01.2021 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!