நிவர் புயலால் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு !!
தமிழகத்தில் தற்போது நிவர் புயல் காரணமாக வானிலை சரியில்லாமல் உள்ளது. இதனால் நாளை முதல் நடைபெற இருந்த MBBS, BDS தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
MBBS, MDS தேர்வுகள் :
தமிழகத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது மருத்துவ பாடங்களான MBBS, BDS போன்றவற்றிக்கு கல்லூரியில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. இப்படங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தினங்களில் நடைபெற இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களும் தேர்விற்கு தயாராகி வந்தனர். ஆனால் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக புயல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
நிவர் புயல் – தேர்வுகள் ஒத்திவைப்பு !!!
தற்போது தமிழகத்தில் நிவர் புயல் தோன்றியுள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேர்வர்கள் தேர்வுகளை எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் தோன்றும் என, நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த தேர்வினை டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாற்றியுள்ளதாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தற்போது அறிவித்து உள்ளது. M.Sc., உள்ளிட்ட நர்சிங் படிப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்