மெட்ரோ ரயில் திட்டம்-2 புதிய அப்டேட்..!! “மத்திய அரசு நிதி வழங்க தயார்”..!!
மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு, சமீபத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்த நிலையில், தற்போது இப்பணி தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மெட்ரோ 2ம் கட்ட திட்டம் தொடர்பாக திமுக M.P ராஜேஷ்குமார் அவர்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய இணை அமைச்சர் தொக்கன் சாஹு “இதுவரை மெட்ரோ திட்டம்-2ல் நிறைவடைந்த பணிகளுக்கு நிதி கோரி எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை. மேலும், “இதுவரை ரூ .38.64% பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளதாகவும், அடுத்த 2027 ஆண்டிற்குள் இந்த திட்டம் நிறைவு பெறும் ” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, அவர் கூறியதாவது, ” இத்திட்டம் முடிவுற மெட்ரோ நிர்வாகம் கோருகின்ற நிதியை மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



























