மெசேஜ் மூலமாக வரும் பெரும் ஆபத்து – இத மட்டும் பண்ணிராதீங்க மக்களே!
பொதுமக்கள் whatsapp மற்றும் மொபைல் நம்பர் மூலம் வரும் எஸ்எம்எஸ் வாயிலாக பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. இது குறித்த ஆய்வின் தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான செய்திகள்:
ஆன்டிவைரஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமான MCAFEE தனது குளோபல் ஸ்கேன் மெசேஜ் குறித்தான ஆய்வை சமீபத்தில் நடத்தியது. ஆய்வின் அறிக்கைகள் தற்போது அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப் மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் செய்திகளில் குறிப்பிட்ட ஏழு செய்திகளை கட்டாயம் கிளிக் செய்யவே கூடாது என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.
TNPSC AE தேர்வு 2023: இன்ஜினியரிங் பட்டதாரிகள் கவனத்திற்கு.. உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
நீங்கள் பரிசை வென்றுள்ளீர்கள், வேலைவாய்ப்பு அல்லது சலுகை குறித்தான போலியான அறிவிப்புகள், யூ ஆர் எல் உடன் வரும் வங்கி எச்சரிக்கை லிங்குகள், நீங்கள் வாங்காத பொருளுக்கான தகவல்கள், NETFLIX அல்லது மற்ற ஓ டி டி சந்தாக்களுக்கான புதுப்பிப்பு, நீங்கள் தவறவிட்ட டெலிவரி அல்லது டெலிவரி சார்ந்த தகவல் செய்திகள், அமேசான் அல்லது மற்ற வணிக நிறுவன செய்திகளுக்கான புதுப்பிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் இதுபோன்ற செய்திகளை எக்காரணம் கொண்டு பொதுமக்கள் கிளிக் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.