2024: நாடாளுமன்ற தேர்தல் – பணிகள் தீவிரம்.. ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தல் பணி:
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே மீதமுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்களை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாய் மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவை எந்த நிலையில் உள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெசேஜ் மூலமாக வரும் பெரும் ஆபத்து – இத மட்டும் பண்ணிராதீங்க மக்களே!
இதன் அடிப்படையில் தமிழகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முகாம்களும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஜனவரியில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.