எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

எம்.எட் மாணவர் சேர்க்கை:

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் முதல் மாணவர் சேர்க்கை வரை அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. தற்போது அரசு கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டு உள்ள தகவலின் படி, அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் ஆண்டுக்கான எம்.எட் (முதுகலை கல்வியியல்) படிப்பு மாணவர் சேர்க்கைக்க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதற்கு www.tngasaedu.in என்ற இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களின் விருப்ப வரிசைப்படி ஜனவரி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்க ரூ.60 (பதிவுக் கட்டணம் ரூ.2 & விண்ணப்பக் கட்டணம் ரூ.58) கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் ரூ.2 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.

தேர்வில்லாமல் ரூ.23,000/- சம்பளத்தில் ECIL வேலைவாய்ப்பு !

இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால் 044-22351014, 044-22351015, 044-28276791 ஆகிய உதவி எண்களில் காலை 10 மணிமுதல் இரவு 6 மணிவரை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் அல்லது [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவிரியிலும் மாணவர்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!